2025ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறையில் ரூ. 35,000 கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2599
2025ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறையில் ரூ. 35,000 கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம்

2025ஆம் ஆண்டுக்குள் விமானவியல், பாதுகாப்புத் தளவாடங்கள் துறையில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி என்பது நமது உற்பத்தித் திறன், திறமை, தரம் ஆகியவற்றின் உயர்வைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

சுவீடனில் உள்ள பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைப்படி, பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 25 இடங்களுக்குள் முதன்முறையாக வந்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments