டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
நீலகிரியில் சுற்றித்திரிந்த டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆட்களை கொன்றதாக கூறி, டி23 புலியை வேட்டையாடிப் பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுக்கு பின் முகாமிட்டு, கும்கி யானைகள், மோப்ப நாய்கள் பயன்படுத்தி கடந்த 15ம் தேதி மயக்க மருந்து செலுத்தி புலி, பிடிக்கப்பட்டதாக வனத்துறை தெரிவித்தது. மேலும், டி23 புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
Comments