நடிகர் ஷாருக்கான் வீட்டில் சோதனை?

0 5421

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை மருந்து வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை பாந்த்ராவில் உள்ள ஷாருக்கானின் வீட்டிற்கு  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு பாந்த்ராவில்  உள்ள மன்னத் என்ற ஷாருக்கானின் 6 மாடி வீட்டிற்கு சுமார் 5  அதிகாரிகள் வந்தனர். ஆர்யன் கான் மீதான போதை மருந்து வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரிக்க அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் தனது மனைவி கவுரி கானுடன் நேரில் சந்தித்து திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர். 

இதனிடையே, போதை மருந்து வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயை விசாரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள், மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments