ஆஃப்கானுக்கு உதவிகள் வழங்குவது குறித்து தாலிபான் துணை பிரதமருடன் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் சந்திப்பு

0 2313

இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள், தாலிபான் துணை பிரதமர் Abdul Salam Hanafi - இடையே மாஸ்கோவில் சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து விவாதிக்க ரஷ்யா, சீனா, ஈரான்,பாகிஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளின் கூட்டம் மாஸ்கோவில் நடந்தது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதிகள், ஆஃப்கானுக்கு உதவிகள் வழங்க முன்வந்துள்ளதாக  தாலிபான் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid தெரிவித்துள்ளார். 

ஆப்கானுக்கு மிக பெரிய அளவிலான கோதுமை உள்ளிட்ட நிவாரணங்களை  வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக  தாலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அனைவருக்குமான ஒருங்கிணைந்த அரசை கட்டமைக்க வேண்டும், தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் இருக்க கூடாது, அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும்  பத்து நாடுகளின் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments