போதைப் பொருள் வழக்கில் சிறையில் உள்ள மகனைச் சந்தித்துப் பேசினார் ஷாருக்கான்!
போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டு மும்பைச் சிறையில் உள்ள ஆர்யன் கானை அவரது தந்தை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசுக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட மூவரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அக்டோபர் மூன்றாம் நாள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆர்யன்கானைப் பிணையில் வெளியே விடச் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டதால், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ஆர்தர் சாலைச் சிறைக்குச் சென்று மகன் ஆர்யன்கானை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
Comments