அரசின் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 1,892 பேர் மீது வழக்கு, 2 கார்கள் பறிமுதல்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நிர்ணயித்த அளவுகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தியிருந்த ஆயிரத்து 892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் முறையான ஆவணமின்றி மனித உரிமைகள் ஆணையத்தின் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த கார் உள்பட 2 கார்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளை பொருத்திய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments