பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் உறவினர்களுடன் சந்தித்துபேச உதவி... எஸ்.ஐ. உள்பட 7 போலீசார் சஸ்பெண்ட்

0 3605

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்களை சேலம் மத்திய சிறைக்கு கூட்டிச் செல்லும் வழியில் விதிமுறைகளை மீறி உறவினர்களை சந்திக்க உதவியதாக உதவி ஆய்வாளர் உள்பட 7 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சேலம் கூட்டிச் செல்லும் போது நடுவழியில் வேனை நிறுத்தி வழக்கில் தொடர்புடையவர்களை உறவினர்களுடன் சந்தித்து பேச உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் உதவுவது போல் வீடியோ வெளியானது.

வீடியோ வேகமாக பரவிய நிலையில் உதவி ஆய்வாளர் உள்பட 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments