வங்கி அதிகாரி போல் பேசி ரூ.1 லட்சம் சுருட்டிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

0 1862

சென்னை ராமாபுரத்தில் வங்கி அதிகாரி போல் பேசி மென்பொருள் நிறுவன பெண் ஊழியரிடம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமலை நகரை சேர்ந்த நவ்யாஸ்ரீ தனியார் வங்கியின் கிரெடிட் கார்ட் மாதாந்திர தவணை குறித்து அறிய வங்கியை தொடர்பு கொண்டதாகவும், அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் நவ்யாஸ்ரீயை தொடர்பு கொண்ட நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், மொபைல் போனுக்கு தான் அனுப்பிய லிங்க் மூலம் பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களை தெரிந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் படிவத்தை நிரப்பி ஓ.டி.பி. எண் பதிவு செய்த பின், நவ்யாஸ்ரீயின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 2 தவணைகளாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நவ்யாஸ்ரீ அளித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments