ஆக்ராவில் போலீஸ் லாக்கப்பில் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தை சந்தித்தார் பிரியங்கா காந்தி
ஆக்ராவில் போலீஸ் லாக்கப்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார்.
திருட்டு வழக்கு ஒன்றில் கைதான அருண் வால்மிகி என்ற துப்புரவுத் தொழிலாளி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, வால்மிகி குடும்பத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை விசாரணை என்ற பெயரில் போலீசார் சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டினார்.
முன்னதாக, லக்னோவில் இருந்து ஆக்ரா சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீசார், நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு 4 பேரை மட்டும் அனுமதித்தனர். வழியில், விபத்தில் காயமடைந்த பெண் ஒருவருக்கு, பிரியங்கா முதலுதவி செய்தார்.
Comments