200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை

0 3607

சிறையில் இருந்தபடியே பல நூறு கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்த சுகேஷ்குமார் மற்றும் அவர் மனைவி லீனா மரியா பால் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பியும் இலங்கையில் படப்பிடிப்பு காரணமாக ஜாக்குலினால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று ஆஜரான ஜாக்குலினிடம் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அவருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் அவர் மனைவி லீனா மரியா பாலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜாக்குலின் வங்கிக் கணக்குகளும் ஆராயப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments