இரவுநேரத்தில் தாஜ்மகாலை கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமாகவும் 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கும் தாஜ்மகாலைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பகலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இரவில் தாஜ்மகாலைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி நிலவொளியில் அழகு பூரணமாக காட்சியளிக்கும் தாஜ்மகாலை நேற்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பேட்டரி வாகனங்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான வீரர்களும் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Comments