மனைவியோடு தவறான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பணம் பறித்ததால் ஆத்திரம்.. நண்பனை கழுத்தறுத்துக் கொன்ற இளைஞன் கைது
சென்னை அருகே மனைவியோடு தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவரிடமிருந்து பணத்தை வாங்கி ஏமாற்றியதாகக் கூறி நண்பனை கொலை செய்த நபர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான்.
நன்மங்கலம் அருகே கடந்த 17ஆம் தேதி சிட்லபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற நபர் கழுத்தறுபட்டு சடலமாகக் கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாக கமலக்கண்ணன் என்ற நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிப்பு வழக்கில் கமலக்கண்ணன் சிறையில் இருந்தபோது, அவனுடைய மனைவியிடம் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட விக்னேஷ்வரன், கமலக்கண்ணனை பார்க்க சிறைக்குச் செல்வதாகக் கூறி அவ்வப்போது அவரிடம் பணம் பெற்றுச் சென்றுள்ளான்.
ஜாமீனில் வெளியே வந்து இதனைக் கேள்விப்பட்ட கமலக்கண்ணன், நண்பர்களோடு சேர்ந்து விக்னேஷ்வரனை கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments