வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்-மத்திய அரசு
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவுடன் பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்ட நாடுகளிலிருந்து உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது தடுப்பூசி போடாதவர்கள், கொரோனா சோதனைக்கான மாதிரிகளை வழங்க வேண்டும் என்றும் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அக்டோபர் 25 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments