தங்க கடத்தல் கும்பல்களுக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய நபர் கைது
அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்க கடத்தல் கும்பல்களுக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணடியில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தும் ஹரிஷ் பர்வேஸுக்கு வாட்ஸப்பில் அவரது பரிசோதனை மையத்தின் பெயரை குறிப்பிட்டு, உடனடியாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என குறுந்தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஹரிஷ், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்த போது, கூகுள் பே மூலம் 500 ரூபாய் பெற்றுக் கொண்டு உடனடியாக அவரது பெயரில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வாட்ஸப் மூலம் அனுப்பப்பட்டது.
ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த இர்பான் என்பவரை செல்போன் எண்ணை வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வெளிநாடுகளுக்குச் சென்ற 500 க்கும் மேற்பட்டோருக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.
Comments