தஞ்சை பெரிய கோவிலில் ஒரு டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்
தஞ்சை பெரிய கோவிலில் ஒரு டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவழ வழக்கம். இதற்காக பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசியும், 500 கிலோ காய்கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக வழங்கப்படும்.
Comments