பாகிஸ்தான் பிரதமருக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல்... பிரச்சனையை சமாளிக்க பதவி உயர்வு அறிவிப்பை வெளியிட்ட இம்ரான் கான்

0 2547

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் ராணுவத்திற்கு இடையே பிரச்சனை நிலவிய நிலையில், நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

மேலும், ராணுவ ஜெனரல் உள்ளிட்ட உயர்பதவியில் இருப்பவர்களும் பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். 

ஐஎஸ்ஐ தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்தநிலையில், அவரின் பதவிக்காலம் முடிந்ததால், நதீம் அகமது என்பவர் தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.

இருப்பினும் நதீம் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நிறுத்தி வைத்தது. இதனால் இம்ரான் - ராணுவ தளபதி கமர் ஜாவேதுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை இம்ரான் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments