பயிற்சிக்கு வந்த 16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்... இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு

0 5323

புதுச்சேரியில் கிரிக்கெட் கிளப்புக்கு பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பயிற்சியாளர்கள் மீதும், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக கூறி இயக்குநர் ஷங்கரின் மருகமகன் உட்பட நிர்வாகிகள் 3 பேர் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

துத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி என்ற கிளப்பில் பயிற்சி பெற்று வந்த 16 வயது சிறுமிக்கு, பயிற்சியாளர்கள் தாமரைக்கண்ணனும், ஜெயக்குமாரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுமி கிளப்பில் புகார் அளித்தும், சங்க நிர்வாகிகள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சிறுமியின் புகாரின் பேரில் சம்பவம் குறித்து விசாரித்த குழந்தைகள் நல குழு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு பரிந்துரைத்திருந்தது.

அதன்பேரில், கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளர்கள் தாமரைக்கண்ணன், ஜெயக்குமார் மீது மேட்டுப்பாளையம் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரிக்கெட் கிளப்பின் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், மற்றும் தாமோதரனின் மகன் ரோஹித் ஆகியோர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

சமீபத்தில், ரோஹித்துக்கும் இயக்குநர் ஷங்கரின் மகளுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments