உயர் அதிகாரி சொன்னால் கொலை செய்வீர்களா? - முன்னாள் எஸ்.பி.யிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

0 9140

உயர் அதிகாரி சொன்னால் கொலை செய்வீர்களா? என பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் எஸ்.பி.யை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் எஸ்.பி. தரப்பில், சிறப்பு டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டதாக கூறப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என வினவிய நீதிபதி, வழக்கு குறித்த விசாரணையை கீழமை நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments