தமிழகத்தில் கிராமப்புறங்களில் இணைய இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டம், ரூ.1,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில், கிராமப்புறங்களில் இணைய இணைப்பு வழங்கிட வகை செய்யும் பாரத் நெட் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதியை ஏற்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களையும் சென்றடையும் வகையில் 50,000 கி.மீ., தூரத்துக்கு இணையவசதி ஏற்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பணிகளுக்கான ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, கிராமப்புறங்களில் இணைய இணைப்புக்கான கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
Comments