தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரு நாட்களுக்கு தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்ட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுகல், மதுரை, நெல்லை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 22-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் உட்பட சில மாவட்டங்களில் கனமழையும், ஏனைய தென் கடலோரம் மற்றும் டெல்டாவில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும். மேலும், தென்னிந்திய பகுதிகளில் வருகிற 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Comments