சிங்கப்பூர் அரசின் விரிவுப்படுத்தப்பட்ட விமான பயணிகள் திட்டம்: கொரோனா நெகட்டிவ் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை
Vaccinated travel lane என்னும் கொரோனா சோதனையில் நெகட்டிவ்-ஆக அறியப்படும் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் நுழையும் விரிவு திட்டத்தின் கீழ் ஆம்ஸ்டர்டாம்-ல் இருந்து புறப்பட்ட முதல் விமானம் சிங்கப்பூர் வந்தது.
ஏற்கனவே ஜெர்மனி மற்றும் புரூணை நாடுகளுடன் இந்த திட்டத்தை சிங்கப்பூர் செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நெதர்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளை சிங்கப்பூர் இப்போது இணைத்துள்ளது.
தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய வர்த்தக மையமாக சிங்கப்பூர் விளங்குவதால் இந்த பயணத் திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Comments