அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் போவெல் மரணம்... முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

0 1744

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ ஜெனரலும், வெளியுறவு அமைச்சருமான காலின் போவெல்லின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காத முன்னாள் அதிபர் டிரம்ப், அவரை குறித்து மோசமாக விமர்சனம் நடத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

84 வயதான காலின் போவெல், கொரோனா பாதித்து கடந்த திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை காலின் போவெல் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈராக் போரின் போது, அவர் பெரிய தவறு இழைத்து விட்டார் என டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

மரணமடைந்து விட்ட அவரை அவரை பொய் ஊடகங்கள் போற்றி புகழ்வதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். பெயரளவுக்கு மட்டுமே காலின் போவெல் குடியரசுக் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும், குடியரசு கட்சியினரை தாக்கி பேசுவதில் அவர் முதல் நபராக இருந்தார் எனவும் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.

ஏராளமான தவறுகள் செய்திருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என டிரம்ப் கூறியிருப்பதற்கு அமெரிக்காவில் பரவலாக கண்டனம் எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments