மைக்கெல் ஜாக்சன் முதல் எம்.எஸ்.தோனி வரை...வாடிக்கையாளர்களின் தலையில் கலை வண்ணத்தை காட்டும் பார்பர் சகோதரர்கள்!

0 2460

கல்லில் கலை வண்ணம் காண்பதைப் போல பஞ்சாப்பை சேர்ந்த முடிதிருத்தும் சகோதரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தலையில் கலை வண்ணத்தை செதுக்கி வருகின்றனர்.

தங்களுக்கு பிடித்தவர்கள் போல் சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பேஷன் பழையதாகி, தங்களுக்கு பிடித்தவர்களையே தலையில் வரைந்து கொள்ளும் காலம் டிரெண்டாகி வருகிறது. மந்தி தாப்வாலி பகுதியை சேர்ந்த ராஜ்விந்தர் சிங் மற்றும் குர்விந்தர் சகோதரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பம் போல் தலை முடியில் சிற்பங்களை செதுக்கி வருகின்றனர்.

மைக்கெல் ஜாக்சன், மிக்கி மவுஸ், எம்.எஸ்.தோனி, சிங்கம் உள்ளிட்டவைகளின் படங்களை வாடிக்கையாளரின் தலை முடியில் தத்ரூபமாக வெட்டி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments