நடிகை ஷெர்லின் சோப்ராவிடம் ரூ 50 கோடி கேட்டு ஷில்பா ஷெட்டி வழக்கு
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1634697312159472.jpg)
ஆபாசப் பட விவகாரத்தில் தமது கணவர் ராஜ் குந்தரா மீது அவதூறு பரப்பியதாக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ஷில்பா ஷெட்டி 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தம்மை ஆபாசப் படத்தில் நடிக்க வைத்து மோசடி செய்ததாகவும் தமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும் ஷெர்லின் சோப்ரா தயாரிப்பாளர் ராஜ் குந்தரா மீது மும்பை ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ராஜ் குந்தரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலடியாக ஷில்பா ஷெட்டியும் ராஜ்குந்தராவும் ஷெர்லின் சோப்ரா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து 50 கோடி இழப்பீடு கேட்டுள்ளனர்.
Comments