தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம், செய்தி தொடர்பாளர் வீடு சூறை... முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசியதாக புகார்

0 2336

ஆந்திர மாநிலம் மங்களகிரியில், தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தை, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபிராம் என்பவர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயவாடாவிலுள்ள பட்டாபிராமின் வீட்டின் மீதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments