தவறான தொடர்பு என கூறி, உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்து கணவனையும் மற்றொரு பெண்ணையும் சரமாரியாக தாக்கிய மனைவி

0 3091

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்து கணவனையும், அவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மற்றொரு பெண்ணையும் காலணியால் மனைவி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனது சகோதரியுடன் உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்த அந்த பெண் இருவரையும் சரமாரியாக தாக்கினார். சண்டையை நிறுத்த முயன்றவருக்கும் அடி விழுந்தது.

தனது மனைவி குற்றம்சாட்டுவது போல் தனக்கு அந்த பெண்ணுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவர் மறுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments