அருணாச்சலை ஒட்டிய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்... தேவையான அளவுக்கு படைகளை நிறுத்தி வைப்பு - மனோஜ் பாண்டே

0 3272

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபடுவதை அதிகரித்து வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், செயற்கைக்கோள்கள், நீண்ட தூரத்திற்கு இயங்கும் டிரோன்கள், நுண்ணறிவு சாதனங்களுடன், சீன ராணுவத்தின் நடவடிக்கைளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறினார்.

ஏதேனும் சவால்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து செக்டார்களிலும் தேவையான அளவுக்கு இந்திய படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். படைகளுக்கு ஆதரவாக இருதரப்பும் முன்களப்பகுதிகளில் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பாண்டே தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments