முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் - உயர்நீதிமன்றம்!
அரசு திட்டங்களுக்கு தங்க காசுகள் வழங்குவதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஜூலையில் விடப்பட்ட டெண்டரில் பங்கேற்ற முத்துட் எக்சிம் நிறுவனம் தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்ததால் அதற்கேற்ப டெண்டர் தொகையை மாற்றிக் கொடுக்கும்படி சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது.விலையில் மாற்றம் செய்யமுடியாவிட்டால் டெண்டர் நடைமுறையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்தது.
ஆனால் இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததுடன், முத்தூட் எக்சிம் நிறுவனம் செலுத்திய வைப்புத்தொகை 53 லட்ச ரூபாயை முடக்கியதுடன், டெண்டர் விதிகளை மீறியதாக கூறி அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தும் சமூக நலத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முத்துட் எக்சிம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Comments