திருப்பத்தூரில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட தனியார் பள்ளி - முதன்மை கல்வி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 2971

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று அங்கீகாரம் பெறாமல் செயல்படுவது குறித்த புகாரில் முதன்மை கல்வி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயர்பாடியில் 800 மாணவர்கள் வரை படிக்கும் வேல் மெட்ரிக் பள்ளி, முறையான அங்கீகாரம் பெறாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன் விசாரணையின்போது,  தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments