புலன் விசாரணை குறைபாடுகள் : போக்சோ குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 2680

புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய எர்லம் பெரைரா என்பவர், எல்.கே.ஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருப்புவனை போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி போக்சோ நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்புவனை போலீசார் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது என்ற நீதிபதி, ஆசிரியர் பெரைராவை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments