விஜயபாஸ்கரின் நண்பரும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவருமான செந்தில் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை

0 2703

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவருமான செந்தில் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அவரது நண்பர் மருத்துவர் செந்திலுக்குச் சொந்தமான சுகம் மருத்துவமனை மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments