இந்தியாவின் பெரிய அணையான இடுக்கி அணை திறப்பு - அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் மீண்டும் கனமழை!
கனமழையை தொடர்ந்து வேகமாக நிரம்பிய கேரளாவின் இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டது. 1978ல் கட்டப்பட்ட இந்த அணை திறக்கப்படுவது இது 4 ஆவது முறையாகும்.
அணை திறக்கப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் பகுதியில் இருந்து 200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.இதேபோல, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையின் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் 10 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழையை தொடர்ந்து 247 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் சுமார் 9 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் கேரளாவில் 35 பேர் உயிரிழந்தனர்.
Comments