மூன்றாவதாக வேறு ஒரு தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போடுவது பற்றி அமெரிக்காவின் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனை!
முதல் மற்றும் இரண்டாம் டோசாக போடப்பட்ட தடுப்பூசிக்குப் பதிலாக மூன்றாவதாக வேறு ஒரு தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போடுவது பற்றி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போட அமெரிக்காவின் உணவு-மருந்து நிர்வாகத்துறை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியது.
அதே நேரம், மாடர்னா அல்லது ஜான்சன்&ஜான்சனின் தடுப்பூசியை வேண்டுமானாலும் பூஸ்டராக போடலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆலோசனை குழு ஆதரவு தெரிவித்தது.
ஆனால் மூன்றாவதாக வேறு ஒரு தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போடுவது பற்றி அமெரிக்க அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.கடந்த வாரம் அமெரிக்க சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், முதல் டோசாக ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி போட்டு, ஃபைசர் மற்றும் மாடர்னா டோசுகளை பூஸ்டர்களாக போட்டவர்களுக்கு உறுதியான நோய் எதிர்ப்புத் திறன் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments