விஜயபாஸ்கர் உதவியாளரின் வீடு, நண்பரின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை சீல்..!

0 2241
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீடு மற்றும் அவரது நண்பரின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீடு மற்றும் அவரது நண்பரின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அவரின் உதவியாளர் சரவணனுக்குச் சொந்தமான நந்தனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், சரவணன் அங்கு இல்லாததால் மீண்டும் சோதனையிட முடிவு செய்து அந்த வீட்டை சீல் வைத்தனர்.

அதேபோல் ஆயிரம் விளக்கில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பரான சந்திரசேகரின் அலுவலகத்தில் சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்த நிலையில், அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியோடு சீல் வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments