வாடிக்கையாளரிடம் இந்தியில் பேச வற்புறுத்திய சொமாட்டோ ஊழியர்; கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் வணக்கம் தமிழ்நாடு என அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த சொமாட்டோ
உணவு டெலிவரி தொடர்பாக புகார் தெரிவித்த வாடிக்கையாளரிடம் இந்தியில் பேசுமாறு சொமேட்டோ கால்சென்டர் ஊழியர் வற்புறுத்தியதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
விகாஷ் என்பவர் சோமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதற்கு சேவை மைய முகவர் இந்தியில் பதிலளித்ததாக கூறப்படும் நிலையில், தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்துமாறு செயலி மூலம் வாடிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என ஊழியர் பதிலளித்திருந்தார். இந்த உரையாடல் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை வாடிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரிய சொமேட்டோ, தமிழில் விளக்கம் அளித்துள்ளது. இந்தியில் பேச வற்புறுத்திய ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், கோவையில் தமிழ் கால் சென்டரை உருவாக்கும் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments