நியூயார்க்கில் நீரவ் மோடி மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய கோரும் மனு நிராகரிப்பு
வங்கி மோசடி வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மோசடி குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அவரது மனுவை, திவால் வழக்குகளை விசாரிக்கும் நியூயார்க் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவில் Firestat Diamond, Fantasy Inc மற்றும் A Jeffe ஆகிய நிறுவனங்களை நீரவ் மோடியும் அவரது கூட்டாளிகளான மிஹிர் பன்சாலி மற்றும் அஜய் காந்தி ஆகியோர் முன்னர் நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்களை நீரவ் மோடியும் கூட்டாளிகளும் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக வழக்கு பதிவானது. இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ரிச்சர்ட் லெவின் என்பவரை நீதிமன்றம் நியமித்தது. அவர் தாக்கல் செய்த அறிக்கையில் குறைந்தது 15 மில்லியன் டாலர்களை நீரவ் மோடியும் கூட்டாளிகளும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் இந்த அறிக்கையையும் வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீரவ் மோடி தரப்பில் தாக்கலான மனுவை, திவால் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீன் எச் லேன் தள்ளுபடி செய்து விட்டார்.
Comments