லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம்... மேலும் 4 பேர் கைது

0 2553

லக்கிம்பூர் கேரியில், வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், மேலும் 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் பாஜகவை சேர்ந்த சுமித் ஜெயிஸ்வால் என்றும் இவர் விவசாயிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த 4 பேரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்துவதாகவும், கைதான மற்றோர் நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments