குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததாக அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

0 2354

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததாக அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பலராமபுரம் பகுதியை சேர்ந்த சிவராஜ் மது அருந்திவிட்டு அடிக்கடி தன் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் ரகளையில் ஈடுபட்ட சிவராஜ்க்கும், அவரது தம்பி பிரகாஷூக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

பிரகாஷ் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிவராஜ் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments