நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

0 1860
ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அண்மைக் காலங்களில் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநில காவல்துறைத் தலைவர்கள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு, போலீசார் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் தொடுத்து வருவதைத் தடுப்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக தேசிய பாதுகாப்பு திட்டமிடுதல் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். எல்லைத் தாண்டி டிரோன்கள் மூலமாக ஆயுதங்கள் கடத்தப்படுவது, டிரோன்கள் மூலமாகத் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஆலோசித்த அவர் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார்.

விரைவில் உளவுத்துறை அதிகாரிகள், அனைத்து மாநில ஐஜிக்கள் மற்றும் டிஜிபிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments