கேரளா, கர்நாடகாவில் இருந்து நீலகிரி வருவோருக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா!

0 2842

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நபர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்ட நிலையில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள 84 ஆயிரம் நபர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments