இருவேறு தடுப்பூசிகள் செலுத்துவது அதிக பலன் தருகிறது - லான்செட் மருத்துவ இதழ்!

0 2866

இருவேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது அதிக பலன் தருவதாக லான்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இரு டோஸ்களும் அஸ்டிராஜெனிகா தடுப்பூசி செலுத்தியோரை விட, முதல் டோசாக அஸ்டிராஜெனிகாவையும், 2-ஆம் டோஸாக எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஸ்வீடனில் வெக்டர் அடிப்படையிலான அஸ்டிராஜெனிகா தடுப்பூசியை முதல் டோஸாக எடுத்துக் கொண்டவர்களுக்கு எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை 2-ஆம் டோஸாக செலுத்த பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும், அஸ்ட்ராஜெனிகா, ஃபைசர் தடுப்பூசிகளை கலவையாக செலுத்தப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு 67% குறைவாக உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments