ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தவில்லை - சீனா
ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக வெளியான தகவல்களை சீனா மறுத்துள்ளது.
Financial Times- ல் வெளியானது போல தாங்கள் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தவில்லை எனவும் அது ஸ்பேஸ் வெகிகிள் எனப்படும் விண்பயண வாகன சோதனை மட்டுமே என்றும், கடந்த ஜூலையில் அதை நடத்தியதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த ஸ்பேஸ் வெகிகிளை மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காக அது பறக்க விடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியான் தெரிவித்தார்.
மனிதர்களை குறைந்த செலவில் விண்வெளிக்கு அனுப்ப இந்த தொழில்நுட்பம் உதவும் என அவர் கூறினார்.
அமெரிக்க உளவுத் துறைக்கு தெரியாத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் அணு ஆயுத சோதனையை சீனா நடத்தியது என Financial Times செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments