ரூ. 200 கோடி பணத்தை மிரட்டிப் பறித்த வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஜாக்குலின் - நீதிமன்றத்தை அணுகும் அமலாக்கத்துறை!

0 4797

தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் முக்கியச் சாட்சியான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நான்காவது முறையாக அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர், அவர் மனைவி லீனா பால் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டிய வழக்கில் முக்கியச் சாட்சியான ஜாக்குலினிடம் ஆகஸ்டு 30ஆம் நாள் அமலாக்கத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வரும்படி இன்று வரை நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நான்கு முறையும் விசாரணைக்கு ஆஜராகாத அவர், தொழில்சார் கடமைகள் உள்ளதால் தான் ஆஜராக முடியவில்லை எனப் பதிலளித்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை அணுகலாமா என அமலாக்கத்துறை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments