ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன ? - உயர்நீதிமன்றம்
சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திரிசூலநாதர் கோவிலுக்குச் சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பில் உள்ள 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன என்பது குறித்தும் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Comments