அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் அத்துமீறலைத் தடுக்க விமானம் மூலம் முழுநேரமும் கண்காணிப்பு
அருணாசலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் மூலம் இந்திய ராணுவம் இரவுபகலாகக் கண்காணித்து வருகிறது.
சீனாவின் எவ்வகையான அச்சுறுத்தல்களையும் அத்துமீறல்களையும் முறியடிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவத்தின் தயார் நிலையை இந்தியா வலுப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெரான் வகை டிரோன்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவத்தின் விமானப் பிரிவு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் பக்கங்களில் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments