இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடிச் செல்லும் டிப் டாப் ஆசாமி!

0 8270

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே டிப் டாப்பாக உடையணிந்த ஒருவன், இருசக்கர வாகனத்தில் ஆடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பாப்பம்பாளையம் பகுதி மக்கள் அங்குள்ள சோதனை சாவடி அருகே ஆடுகளை மேய்ப்பது வழக்கம். ஆடுகள் திருடுபோவதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் ஆட்டினை திருடிக் கொண்டு அவ்வழியே பைக்கில் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இத்தகைய திருட்டுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஆடு வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments