தேனியில் தந்தைக்கு கல்லீரல் தானம் செய்து உயிரை காப்பாற்றிய மகன்!
தேனி அருகே கல்லீரல் தானம் வழங்கி, தந்தையின் உயிரை, அவரது மகன் காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு கல்லீரல் செயலிழந்த நிலையில், கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, குடும்பத்தில் ஒருவர் கல்லீரல் தானம் செய்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
செல்வராஜின் மனைவி சந்தன மாரியம்மாளின் கல்லீரலின் பாதியை எடுத்து பொருத்தப்பட இருந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மறுவளர்ச்சி பெற வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து தானம் தர முன்வந்த மகன் அஜய்க்கு பரிசோதனை நடத்தி அவரது கல்லீரலில் இருந்து 60% எடுத்து செல்வராஜிற்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த நிலையில், அஜய்க்கு 80%-உம், முழுமையாக அகற்றி பொருத்தப்பட்ட செல்வராஜுக்கு 80%-உம் கல்லீரல் வளர்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments