அரசு பணியாளர் வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியும் அரசாணை வெளியீடு

0 2880

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்ட காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் கல்வித்துறைக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய சம்பந்தபட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments