புதிய உச்சத்தைத் தொட்ட மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் !

0 5871

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த ஒருவாரக் காலமாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்து வரும் நிலையில், இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 512 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 894 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 521 ஆக இருந்தது. வங்கிகள், உலோகத் தொழில் நிறுவனங்களின் பங்குவிலை 4 விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments