காவல் ஆய்வாளர்கள் லஞ்சம் வாங்குவதாக புள்ளிவிவரங்களோடு சுற்றறிக்கை அனுப்பிய சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபினவ்
சேலம் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் தொடங்கி, காவல் நிலைய எழுத்தர் வரை எந்தெந்த செயலுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகின்றனர், யார் யாரிடம் எவ்வளவு மாமூல் வாங்குகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை அதிரடியாக வெளியிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில், காவல் ஆய்வாளர்கள் சிவில் குற்றங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்குகின்றனர் என்றும், அழகு நிலையங்கள் நடத்துவோரிடம் 5 ஆயிரம் ரூபாய் வரையும் லாட்ஜ் உரிமையாளர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் வரையும் மாமூல் வாங்குகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காவல் உதவி ஆய்வாளர்கள், நிலைய எழுத்தர்கள், ரோந்து போலீசார் என அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் எவ்வளவு லஞ்சம் மற்றும் மாமூல் வாங்குகின்றனர் எனத் தெரிவித்துள்ள எஸ்.பி. ஸ்ரீஅபினவ் சட்டத்திற்குட்பட்டு, லஞ்சமற்ற நிலையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments